இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார்.
இந்தியாவில நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை தொடரோடு அவரது பதவிக்காலம் முடிவடைந்தது.
உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வென்றால், ராகுல் டிராவிட் தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
தோல்வியடைந்ததால் எதிர்காலம் குறித்து என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது. தற்போது அதுகுறித்து யோசிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வி.வி.எஸ். லட்சுமண் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராகலாம் எனத் தெரிகிறது.