Dec 29, 2025
Thisaigal NewsYouTube
சவுதி புரோ லீக்: ரொனால்டோ அபாரம்
விளையாட்டு

சவுதி புரோ லீக்: ரொனால்டோ அபாரம்

Share:

துபாய், டிசம்பர்.29-

சவுதி புரோ லீக் கால்பந்து போட்டியில் அல் நசார் கிளப், அல் அக்தூத் கிளப்பை 3-0 என்ற கோல்களில் வீழ்த்தியது. அல் நசாரின் மூன்று கோல்களில் இரண்டை கோல் மன்னன் கிரிஸ்டியானோ ரொனால்டோ அடித்து அதிரடி காட்டினார். அவ்வகையில் அக்கிளப்பில் அவர் தனது சிறந்த அடைவு நிலையைத் தற்காத்து வருகிறார்.

முற்பாதி ஆட்டத்தில் ரொனால்டொ இரு கோல்களையும் புகுத்தினார். அல் நசாரின் மூன்றாவது கோல் பிற்பாதி ஆட்டத்தில் போடப்பட்டது. ரொனால்டோவின் இரு கோல்கள் அவரது கால்பந்து வாழ்க்கையில் 955 மற்றும் 956 ஆவது கோல்களாகும்.

அவ்வெற்றியின் மூலம் அல் நசார் இதுவரை நடந்து முடிந்துள்ள பத்து ஆட்டங்களிலும் வெற்றியைப் பதிவு செய்து லீக் வரலாற்றில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. இப்பருவத்தில் அவ்வணி இதுவரை மொத்தம் 33 கோல்கள் அடித்து புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

Related News