ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
ஆட்டமிழக்காமல் 143 பந்தில் 129 ரன்கள் விளாசினார். இதனால் ஆப்கானிஸ்தான் 291 ரன்கள் குவித்தது.
பின்னர் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்கத்தில் அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
18.3 ஓவரில் 91 ரன்கள் எடுப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அப்போது ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் நிலையில் இருந்தது.