பேங்காக், டிசம்பர்.18-
2025 தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு மேலும் ஒரு தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது. அத்தங்கம் அம்பெய்தும் பிரிவில் பெறப்பட்டது. தேசிய ஆடவர் குழு தாய்லாந்துடன் களமிறங்கியது.
தேசிய குழு சார்பில் ஜுவாய்டி மசுக்கி, முஹமட் சியாபிக், எம்டி அரிஃபின், முஹமட் அய்மான் சியாஃபிக் தாரிகி, அலங் அரிஃப் அகில் முஹமட் கசாலி ஆகியோர் பங்கேற்றனர். அப்போட்டியில் 232-228 என்ற புள்ளிகளை ஈட்டி மலேசியா தங்கம் வென்றது.








