கோலாலம்பூர், நவம்பர்.25-
விளையாட்டுத்துறை ஊடகவிலாளர் Hares Deol, தாக்கப்பட்ட சம்பவத்திற்கு SAM (சேம்) எனப்படும் மலேசிய விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
SAM- மின் உறுப்பினரான Hares Deol, இன்று மாலை 3.30 மணியளவில் அடையாளம் தெரியாத இரு நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் சொற்ப காயங்களுக்கு ஆளாகியுள்ளார்.
ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தனது கண்டனத்தைப் பதிவுச் செய்த SAM, இது குறித்து போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழிகளைக் கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.








