கோலாலம்பூர், ஜூலை.24-
நாட்டின் முதல் நிலை ஆடவர் இரட்டையர்களான ஆரோன் சியா-சோ வூய் யிக் சீன பொது பூப்பந்து போட்டியின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். அதன் வழி அவர்கள், தங்கள் முதல் சூப்பர் 1000 பட்டத்திற்கான வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இரண்டாவது சுற்றில், உலகின் இரண்டாவது நிலை ஜோடியான, பிரான்ஸ் சகோதர்களான கிறிஸ்டோ போபோவ்-டோமா ஜூனியர் போபோவை 21-17, 21-18 என்ற செட் கணக்கில் அவர்கள் தோற்கடித்தனர்.
இதற்கு முன் மலேசிய பூப்பந்து போட்டி, அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டி, இந்தோனேசிய பொது பூப்பந்து போட்டி ஆகியவற்றில் தொடக்கக் கட்டத்திலேயே வெளியேறிய ஏரோன் சியா- சோ வூய் யிக் இம்முறை போராட்ட உணர்வுடன் களமிறங்கியுள்ளனர்.
ஈராண்டுகளுக்கு முன் அவர்கள் சீன பொது பூப்பந்து போட்டியில் மிகச் சிறந்த அடைவு நிலையாக இரண்டாம் இடத்தை வென்றனர். கடந்த ஆண்டு வூய் யிக் காயமடைந்ததால் அவர்கள் போட்டியில் பங்கேற்கவில்லை.