இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங், இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அவரை கைது செய்யக்கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர் மீது
வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே, கடந்த 21-ந் தேதி நடந்த இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்கள் பெருமளவில் வெற்றி பெற்றனர்.
அவரது நெருங்கிய கூட்டாளியும், உத்தரபிரதேச மல்யுத்த சங்க துணைத்தலைவருமான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரால் தங்களுக்கு எந்த விதத்திலும் நியாயம் கிடைக்கப்போவதில்லை, பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்கள் யாரும் மல்யுத்த நிர்வாகத்தில் இருக்கக்கூடாது என்று மல்யுத்த
நிர்வாகத்தில் இருக்கக்கூடாது என்று மல்யுத்த நட்சத்திரங்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கினர்.