Oct 19, 2025
Thisaigal NewsYouTube
ருதுராஜ் கெய்க்வாட்: சிஎஸ்கே அணியில் தோனியின் இடத்தை இவரால் நிரப்ப முடியுமா?
விளையாட்டு

ருதுராஜ் கெய்க்வாட்: சிஎஸ்கே அணியில் தோனியின் இடத்தை இவரால் நிரப்ப முடியுமா?

Share:

இந்தியா, மார்ச் 22.

சிஎஸ்கே அணிக்காக 5 முறை (2010, 2011, 2018, 2021, 2023) சாம்பியன்ஷிப் பட்டம், 5 முறை 2வது இடம் என பெற்றுக் கொடுத்த ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டார்.

2024ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரை சிஎஸ்கே அணி 27வயதான ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சந்திக்க இருக்கிறது.

42 வயதாகும் தோனி, வயது மூப்பு காரணமாகவும், கடந்த ஆண்டு முழங்காலில் செய்துகொண்ட அறுவை சிகிச்சையாலும், களமிறங்குவாரா, பேட் செய்வாரா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ஐபிஎல் டி20 தொடரில் வெற்றிகரமான கேப்டன் என்றாலே அது சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி, மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா என்று விமர்சகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இருவருமே தாங்கள் சார்ந்த அணிக்கு 5 முறை சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுக் கொடுத்தாலும் இந்த ஐபிஎல் தொடரில் இருவருமே அணிக்கு தலைமை ஏற்கவில்லை என்பது சற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்திதான்.

Related News