Oct 20, 2025
Thisaigal NewsYouTube
USA vs IND:T20 World Cup 2024ல் முதல் ஓவரில் முதல் பந்தில் விக்கெட் எடுத்து அர்ஷ்தீப் சிங் வரலாற்று சாதனை!
விளையாட்டு

USA vs IND:T20 World Cup 2024ல் முதல் ஓவரில் முதல் பந்தில் விக்கெட் எடுத்து அர்ஷ்தீப் சிங் வரலாற்று சாதனை!

Share:

அமெரிக்கா , ஜூன் 13-

அமெரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் முதல் ஓவரில் முதல் பந்தில் விக்கெட் எடுத்த முதல் இந்திய வீரராக அர்ஷ்தீப் சிங் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 25ஆவது போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அமெரிக்கா அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கேப்டன் மோனன்க் படேல் காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ஷயான் ஜஹாங்கீர் இடம் பெற்றுள்ளார். இதே போன்று, நோஸ்துஷ் கென்ஜிகே நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷாட்லி வான் ஷால்க்விக் அணியில் இடம் பெற்றுள்ளார்.

சயான் ஜஹாங்கீர் மற்றும் ஸ்டீவன் டெய்லர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் முதல் பந்தில் ஜஹாங்கீர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார்.

அதே ஓவரின் கடைசி பந்திலும் விக்கெட் எடுத்தார். ஆண்ட்ரிஸ் கௌஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் ஓவரின் முதல் பந்தில் மட்டுமின்றி ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் இந்தியராகவும் அர்ஷ்தீப் சிங் சாதனை படைத்துள்ளார்.

கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 11 ரன்களில் வெளியேற, நிதானமாக விளையாடி வந்த ஸ்டீவன் டெய்லர் 24 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த நிதிஷ் குமார் பொறுமையாக விளையாடி 27 ரன்கள் எடுக்கவே, கோரி ஆண்டர்சன் 14 ரன்களும், ஹர்மீத் சிங் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியில் வான் ஷால்க்விக் 11 ரன்கள் எடுத்துக் கொடுக்க ஜஸ்தீப் சிங் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக அமெரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் எடுத்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டும், அக்‌ஷர் படேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Related News