Oct 19, 2025
Thisaigal NewsYouTube
கண் கலங்கிய விராட்- கட்டித் தழுவி ஆறுதல் கூறிய மனைவி அனுஷ்கா
விளையாட்டு

கண் கலங்கிய விராட்- கட்டித் தழுவி ஆறுதல் கூறிய மனைவி அனுஷ்கா

Share:

குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6 -ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்திய அணி தோல்வியடைந்ததை ஒட்டி, ரசிகர்கள் சோகத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேறினர்.

இந்திய அணி வீரர்களும் களத்திலேயே மனமுடைந்து கண்ணீர் சிந்தியபடி வெளியேறினர்.

இந்நிலையில், தோல்வி அடைந்ததை நினைத்து சோகமாக சென்ற விராட் கோலியை ஆரத் தழுவி ஆறுதல் கூறினார்.

இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related News