உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை வீரர்கள், ரசிகர்கள் மட்டுமல்ல, ஏறக்குறைய கிரிக்கெட் தெரிந்த அனைத்து தரப்பு மக்களாலும்
ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
இதற்கிடையே இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று நடைபெற இருக்கிறது.
. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2021-ம் ஆண்டில் இருந்து இந்தியா டி20 அணியின் 9-வது கேப்டன் இவராவார்.