ஹாங் காங், செப்டம்பர்.12-
நாட்டின் மகளிர் இரட்டையர் பிரிவு வீராங்கனைகளான பெர்லி டான்-எம். தீனா ஹாங் காங் பொது பூப்பந்து போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். காலிறுதியில் சக நாட்டு வீராங்கனைகளைச் சந்தித்த அவர்கள் அதில் நேரடி செட்களில் வெற்றி பெற்றனர்.
அவ்வாட்டத்தில் வெற்றி பெற அவர்கள் வெற்றி பெற எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 31 நிமிடங்கள் மட்டுமே. அரைறுதியில் பெர்லி டானும் எம். தீனாவும் சீன நாட்டு விளையாட்டாளர்களுடன் மோதவுள்ளனர்.








