Oct 19, 2025
Thisaigal NewsYouTube
விளையாட்டு

தென் ஆப்பிரிக்கா தொடர்: டெஸ்ட், ஒருநாள், டி20 தொடருக்கான இந்திய கேப்டன்கள் அறிவிப்பு

Share:

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டிசம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஒருநாள் போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் கேப்டனாகவும், டி20 போட்டிகளுக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related News