இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.
முதல் டெஸ்டில் விளையாடிய ஜடேஜா, கேஎல் ராகுல், முகமது சிராஜ் ஆகியோர் இந்த டெஸ்டில் இடம் பெறவில்லை.
ரஜத் படிதார் முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆனார். மேலும் முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இங்கிலாந்து அணியில் ஜேக் லீச், மார்க் வுட் இடம் பெறவில்லை.
சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம் பிடித்தனர்.