இங்கிலாந்து, ஆகஸ்ட்.20-
லிவர்பூல் கோல் மன்னன் முகமட் சாலா, கால்பந்தாட்ட வீரர்கள் சங்கத்தின் பிஎஃப்ஏ விருதை வென்றுள்ளார். அவர் அவ்விருதைப் பெறுவது இது மூன்றாவது முறையாகும். இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வெல்ல லிவர்பூலுக்கு உதவியதற்காக அவருக்கு அவ்விருது கிடைத்தது.
சாலா, கடந்த பருவத்தில் 29 கோல்களைப் புகுத்தியுள்ளார். 18 கோல்களை அடிக்க உதவியுள்ளார். அபாரமாக விளையாடக்கூடிய சாலா, கடந்த பருவத்தில் லிவர்பூல் 20 ஆவது தடவையாக இபிஎல் கிண்ணத்தைக் கைப்பற்ற முக்கியப் பங்காற்றினார்.
இதற்கு முன் 2017-2018 மற்றும் 2021-2022 என இரு பருவங்களில் சாலா சிறந்த ஆட்டக்காரருக்கான பிஎஃப்ஏ விருதைப் பெற்றார்.