Oct 19, 2025
Thisaigal NewsYouTube
என் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்து விடுவேன் என மிரட்டினார்- லலித் மோடி மீது பிரவீன் குமார் குற்றச்சாட்டு
விளையாட்டு

என் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்து விடுவேன் என மிரட்டினார்- லலித் மோடி மீது பிரவீன் குமார் குற்றச்சாட்டு

Share:

உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த வீரரான பிரவீன் குமார், இந்திய அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்ற பின் அறிமுகம் செய்யப்பட்டவர்.

2007 முதல் 2012-ம் ஆண்டு வரை டோனியின் கேப்டன்சியில் ஆடிய வீரர். புதிய பந்தில் ஸ்விங் செய்வதில் வல்லவராக திகழ்ந்தார்.

இவர் கடந்த சில நாட்களாக கூறி வரும் தகவல்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்திய அணி வீரர்களின் மதுப் பழக்கம், ஆர்சிபி அணிக்காக விளையாட விரும்பாதது, வீரர்கள் நட்புடன் பழகவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

Related News