இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் தற்போது ரஞ்சி தொடரில் விளையாடி வருகிறார். கர்நாடக அணி கேப்டனான மயங்க் அகர்வால் தனது அணியினருடன் டெல்லி புறப்பட
விமான நிலையம் சென்றார்.
அணியினருடன் விமானத்தில் ஏறிய மயங்க் அகர்வாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
விமானத்தில் இருந்த படி சில முறை அவர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து விமானத்தில் இருந்து அவசரஅவசரமாக வெளியேறிய மயங்க் அகர்வால் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவரு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.