லண்டன், நவம்பர்.05-
இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் டேவிட் பேக்கம் 'சர்' பட்டத்தைக் கொண்டு வரும் நைட்ஹூட் விருதைப் பெற்றுள்ளார். பல ஆண்டுகளாக விளையாட்டு மற்றும் தொண்டுப் பணிகளில் அவர் ஆற்றி வரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அப்பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசர் சார்ல்ஸ், அப்பட்டத்தை வழங்கினார்.
டேவிட் பேக்கம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்து துறைக்குத் தமது பங்கை ஆற்றி வருகிறார். பட்டம் வழங்கும் நிகழ்வில் பேக்கமின் மனைவி விக்டோரியா பேக்கமும் கலந்து கொண்டார்.
லண்டனில் பிறந்த பேக்கம், 1995 ஆம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இணைந்து தமது கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கினார். இங்கிலாந்தைப் பிரநிதித்து அவர் 115 ஆட்டங்களில் களமிறங்கியுள்ளார். அவர் 2013 ஆம் ஆண்டு கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.








