Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஃஎப்ஏஎம்மில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் ஃபிஃபாவை எஸ்பிஆர்எம் தொடர்பு கொள்ளும்
விளையாட்டு

ஃஎப்ஏஎம்மில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் ஃபிஃபாவை எஸ்பிஆர்எம் தொடர்பு கொள்ளும்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.27-

மலேசிய கால்பந்து சங்கத்தின் ஹரிமாவ் மலாயா தேசிய அணியில், 7 ஆட்டக்காரர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் போலியானவை என்று கூறப்படுவது தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது என்று அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் மேல் விபரங்களைப் பெறும் பொருட்டு அனைத்துலக கால்பந்து சம்மேளனமான FIFA-வுடன் தொடர்பு கொண்டு தேவையான விளக்கங்களைப் பெறுமாறு எஸ்பிஆர்எம்மின் தலைமை விசாரணை இயக்குநர் ஸைனுல் டாருஸ் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

கால்பந்து துறையில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் இந்த ஊழல் குறித்து விசாரணை செய்வதற்கு எஸ்பிஆர்எம்மிற்கு அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து FIFA- வழி விளக்கம் பெறப்படும் என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

Related News