Oct 18, 2025
Thisaigal NewsYouTube
யுஏஃபா நேஷன்ஸ் லீக்: போர்ச்சுகல் ஜெர்மனியை வீழ்த்தியது
விளையாட்டு

யுஏஃபா நேஷன்ஸ் லீக்: போர்ச்சுகல் ஜெர்மனியை வீழ்த்தியது

Share:

ஜெர்மனி, ஜூன்.05-

யுஏஃபா நேஷன்ஸ் லீக் கால்பந்தின் அரையிறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் 2க்கு 1 என ஜெர்மனியை வீழ்த்தியது. ஆட்டத்தின் 63 ஆவது நிமிடத்தில் பிரான்சிஸ்கோ கொன்சைவ் போர்ச்சுகலுக்கான முதலாவது கோலைப் போட்டார். அடுத்த ஐந்து நிமிடங்களில் இரண்டாவது கோலை அடித்து கோல் மன்னன் கிரிஸ்டியானோ ரொனால்டோ அணியின் வெற்றியை உறுதிச் செய்தார். தேசிய அணிக்காக இதுவரை 220 ஆட்டங்களில் களமிறங்கியுள்ள ரொனால்டோ புகுத்திய 137 ஆவது கோல் அதுவாகும்.

ஈராயிரத்தாம் ஆண்டு யூரோ கிண்ணத்தில் போர்ச்சுகல் இறுதியாக ஜெர்மனியைத் தோற்கடித்தது. அதன் பிறகு போர்ச்சுகல் ஐந்து முறை தோல்வியுற்றது. இவ்வேளையில் இறுதியாட்டத்தில் போச்சுகல், பிரான்ஸ் அல்லது ஸ்பெயினுடன் களமிறங்கும்.

Related News