Oct 19, 2025
Thisaigal NewsYouTube
ஆசியக் கிண்ணக் காற்பந்து போட்டி : பெரிய திரை அமைக்கப்படும்
விளையாட்டு

ஆசியக் கிண்ணக் காற்பந்து போட்டி : பெரிய திரை அமைக்கப்படும்

Share:

கோலாலம்பூர், ஜன - 5,

கத்தார் நாட்டில் நடைபெற இருக்கும் ஆசியக் கிண்ணக் காற்பந்து போட்டி நடக்க இருக்கின்ற நிலையில். மலேசிய அணி ஆதரவாளர்களுக்கும் காற்பந்து ரசிகர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை இளைஞர் விளாஇயாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் இரு பெரிய திரைகள் அமைக்கப்பட்டு மலேசிய அணி களமிறங்கும் ஆட்டங்கள் ஒளிபரப்பப்படும் என்ற நற்செய்தியை அறிவித்துள்ளார் அமைச்சர் ஹன்னா இயோ.

ஹரிமாவ் மலாயாவுக்கு ஆதரவளிக்க எல்லோரும் தவறாமல் கலந்து கொள்ள ஹன்னா இயோ அழைப்பு விடுத்தார்.

E குழுவில் இடம்பெற்றுள்ள தேசிய அணி Jordanஉடன் ஜனவரி 15 ஆம் தேதியும் Bahrain உடன் ஜனவரி 20 ஆம் தேதியும் களம் காண உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆசியக் கிண்ணத்தை இரு முறை வெற்றி கொண்ட தென் கொரியாவை ஜனவரி 23 ஆம் தேதி சந்திக்க உள்ளது.

Related News