உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின.
இலங்கை 344 ரன்கள் குவித்த நிலையில், பாகிஸ்தான் எளிதாக சேஸிங் செய்தது.
இந்த போட்டி பல்வேறு சாதனைகளை கண்டுள்ளது. அதனைப் பார்ப்போம்
1. ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை முகமது ரிஸ்வான் (131 நாட்அவுட்) படைத்துள்ளார்.
2. உலக கோப்பையில் சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்
3. இலங்கை, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தலா இரண்டு வீரர்கள் என 4 பேர் சதம் அடித்தனர். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் நான்கு சதங்களை கண்ட போட்டி என்ற
சாதனையில் இணைந்துள்ளது. இலங்கையில் குசால் மெண்டிஸ் (122), சமரவிக்ரமா (108) ஆகியோரும் பாகிஸ்தானில் அப்துல்லா ஷபிக் (113), முகமது ரிஸ்வான் (131) ஆகியோரும் சதம் அடித்தனர்.