செராஸ், செப்டம்பர்.10-
2025 மகளிருக்கான ஆசியக் கிண்ண ஹாக்கி போட்டியின் ஏ குழுவுக்கான ஆட்டத்தில் மலேசியா தென் கொரியாவிடம் தோல்வி கண்டது. சீனாவில் நடைபெற்று வரும் அப்போட்டியின் தொடக்க ஆட்டத்தில் மலேசியா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும் தென் கொரியாவுடனான ஆட்டத்தில் அது 0-5 என்ற கோல்களில் தோல்வியுற்றது.
அத்தோல்வியால் மூன்று புள்ளிகளுடன் தேசிய மகளிர் அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. 9 புள்ளிகளுடன் சீனா முதலிடத்தை ஆக்கிரமித்துள்ளது. தென் கொரியா ஆறு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.