ஜகார்த்தா, ஆகஸ்ட்.24-
செவி திறன் குறையுடையோருக்கான சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா 16 தங்கப் பதக்கங்களை வாகை சூடியது. 16 ஆவது தங்கத்தை பூப்பந்து போட்டியில் கலப்பு இரட்டையர்களான எட்மண்ட் தியோ செங் கியோங்-பூன் வெய் இங் பெற்றுத் தந்தனர். அவ்விருவரும் உபசரணை நாட்டு ஜோடியை நேரடி செட்களில் வீழ்த்தினர்.
சதுரங்கம், ஃபுட்சால் உள்ளிட்ட பிற போட்டிகளில் மலேசியா இதர தங்கப் பதக்கங்களைப் பெற்றது. அதன் வழி அது தங்கப் பதக்க இலக்கை அடைந்தது.