கோலாலம்பூர், அக்டோபர்.08-
மலேசியாவின் கலப்பு-பாரம்பரிய வீரர்களைப் பதிவு செய்யும் செயல்பாட்டில், போலி ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை ஃபிஃபா வெளியிட்டுள்ளது.
ஃபிஃபாவால் பெறப்பட்ட அசல் பிறப்புச் சான்றிதழ்களுக்கும், வீரர்களின் மலேசிய பாரம்பரியத்தை நிரூபிக்க, மலேசிய கால்பந்தாட்டச் சங்கம் சமர்ப்பித்த சான்றிதழ்களுக்கும் இடையே, பெரிய முரண்பாடுகள் இருப்பதை ஃபிஃபா சுட்டிக் காட்டியுள்ளது.
இம்மோசடி குற்றச்சாட்டின் காரணமாக, எஃப் எஎம்முக்கு 350,000 Swiss francs-களும், ஒவ்வொரு வீரருக்கும் தலா 2,000 Swiss francs-களும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், ஒரு வருடத்திற்கு கால்பந்து தொடர்பான எந்த ஒரு நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஃபிஃபா குறிப்பிட்டுள்ளது.