பெராகாஸ், செப்டம்பர்.23-
புருணை, பெராகாஸில் நடைபெற்ற சூப்பர் லீக் கிண்ண கால்பந்தாட்டத்தில் கேஎல் சிட்டி எஃப்சி, டிபிஎம்எம் எஃப்சியை 4க்கு 0 என்ற கோல்களில் தோற்கடித்தது. அதன் வழி கேஎல் சிட்டி ஐந்தாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்தது.
அதே சமயம் புள்ளிப் பட்டியலில் அது திரங்கானு எஃப்சியைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அவ்வாட்டத்தில் கேஎல் சிட்டி மிகச் சிறப்பாக விளையாடியது. முதல் கோல் சொந்த கோலான நிலையில், பிற மூன்று கோல்கள் ஆட்டத்தின் பிற்பாதியில் போடப்பட்டன.








