கோலாலம்பூர், நவம்பர்.08-
நாட்டின் ஆடவர் இரட்டையர் பிரிவு பூப்பந்து ஆட்டக்காரரான ஏரன் சியா தாம் புதிய விளையாட்டாளர்களுடன் இணைந்து களமிறங்கத் தயார் எனக் கூறியிருக்கிறார். அதில் தமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
தாய்லாந்து சீ போட்டியில் தங்கம் வெல்ல இலக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எந்த மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயார் என்றாரவர். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஏரன் தங்கம் வென்றார். அடுத்த முறையும் அவர் தமது சகாவான சொ வுய் யிக்குடன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இறுதி முடிவு பயிற்றுனரைப் பொருத்ததாகும்.
ஆகக் கடைசியாக 2021 ஆம் ஆண்டு வியட்னாம் சீ போட்டியில் மலேசியாவுக்குத் தங்கம் கிடைத்தது.








