கோலாலம்பூர், நவம்பர்.04-
பள்ளிகளுக்கு இடையிலான 2025 ஆம் ஆண்டின் 19ஆவது ஆசிய சதுரங்கப் போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த இளம் சதுரங்க ஆட்டக்காரரான Genivan Genkeswaran முதல் நிலையில் வாகை சூடி, சாதனைப் படைத்துள்ளார்.
மங்கோலியா, Ulaanbaatar- ரில் நடைபெற்ற ஆசிய சதுரங்கப் போட்டியில் 16 வயது Genivan Genkeswaran, ஆஸ்திரேலியா, சீனா, ரஷியா, இந்தியா, இந்தோனேசியா, கொரியா, சிங்கப்பூர் மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சதுரங்க ஆட்டக்காரர்களை வீழ்த்தி, புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
17 வயதுக்கு கீழ்பட்ட மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த Genivan Genkeswaran இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளதாக Chess Master Journey என்ற அமைப்பு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அனைத்துலக சதுரங்கப் போட்டி சம்மேளம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப U13, U15 மற்றும் U17 ஆகிய பிரிவுகளில் Genivan Genkeswaran தங்கப் பதக்கத்தை வென்றார்.
இதற்கு முன்பு, Candidate Master எனும் பட்டத்தைத் தாங்கியிருந்த Genivan Genkeswaran க்கு இந்த மகத்தான சாதனையின் மூலம் FIDE Master எனும் பட்டத்தை அனைத்துலக சதுரங்கப் போட்டி சம்மேளம் வழங்கி சிறப்பு செய்துள்ளது.
Genivan Genkeswaran, இந்த சாதனையானது, மிகப் பெரிய அடைவு நிலையாகும் என்று அந்த சம்மேளனம் வர்ணித்துள்ளது.








