உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி முதல் முறையாக டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக விலகி உள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ஆடவில்லை.
தொடர்ந்து எஞ்சிய 3 டெஸ்டிலும் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அவர் எதற்காக விலகினார் என்ற காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்தநிலையில் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி. சி.சி.ஐ) தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று அதன் செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார்.