ஐ.பி.எல். போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு சீசனிலும் ஐ.பி.எல். விதி முறைகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
டி.ஆர்.எஸ். உள்பட பல்வேறு விதிமுறைகள் இந்தப் போட்டியில் இருக்கிறது.
கடந்த ஐ.பி.எல். போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் (இம்பேக்ட்) விதி அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் ஒரு ஓவருக்கு 2 பவுன்சர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டி பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும் வகையில் இருப்பதால் பந்துவீச்சாளர் களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது
இதன் காரணமாகவே ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்ஸ் வீச அனுமதி வழங்கப் பட்டுள்ளது. உள்ளூர் போட்டியான சையது முஷ்டாக் அலி கோப்பையில் சோதனை முறையில் செய்யப்பட்டது.
தற்போது ஐ.பி.எல். போட்டியில் கொண்டு வரப்பட்டுள்ளது.