ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் கிளென் மெக்கிராத் வீட்டில் பாம்பு புகுந்தது. அதை பிடிக்க அவர் முயற்சி செய்த போது பாம்பு கடிக்க வந்தது. எனினும், அவர் நூலிழையில் உயிர் தப்பி இருக்கிறார். 90 களின் கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க முடியாத ஒரு பெயர் என்றால் அது கிளென் மெக்கிராத். அவர் பந்து வீசுகிறார் என்றால் மற்ற அணிகளின் ரசிகர்கள் பதற்றத்தோடு தான் இருப்பார்கள். அப்படி ஒரு பந்துவீச்சு அவருடையது.
அவரை அடித்து ஆடும் பேட்ஸ்மேன் அவர் ஓய்வு பெறும் வரை வரவே இல்லை. அப்படி அடித்து ஆடினால் அவரின் விக்கெட் காலியாகி விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது பந்துவீச்சை வேறு எந்த ஒரு வீரராலும் பின்பற்ற முடியவில்லை. அப்படி ஒரு தனித்துவமான பந்துவீச்சு அவருடையது.
தற்போது பயிற்சியாளராக, பந்துவீச்சு ஆலோசகராக ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் மட்டும் செயல்பட்டு வருகிறார் மெக்கிராத். மற்ற நேரங்களில் வீட்டில் குடும்பத்தினருடன் செலவிட்டு வருகிறார். இந்த நிலையில், அவர் வீட்டில் மூன்று பாம்புகள் புகுந்துள்ளன. அதை தானே பிடித்து வெளியேற்ற முடிவு செய்த மெக்கிராத்.
வீட்டை துடைக்கும் மாப் ஸ்டிக்கை வைத்து அதை லாவகமாக பிடித்தார். அப்போது அந்த பைதான் வகை பாம்பு அவரை கடிக்க வந்தது. ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் சுதாரித்து தப்பினார் மெக்கிராத். அதைக் கண்ட அவரது மனைவி அலறினார் . எனினும், ஒருவாறு சமாளித்து அந்த பாம்பை வெளியேற்றினார்.
தற்போது உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில் மெக்கிராத் தொடர்ந்து மூன்று முறை உலகக்கோப்பை என்ற ஆஸ்திரேலிய அணியில் முன்னணி பந்து வீச்சாளராக இடம்பெற்றதை மறந்து விட முடியாது. 1999, 2003 மற்றும் 2007 என மூன்று உலகக்கோப்பை தொடரை தொடர்ந்து வென்று சாதனை படைத்துள்ளார்.