சோன்புரி, டிசம்பர்.14-
34 ஆண்டுகளாகத் தொடர்ந்த ஏக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, இன்று தாய்லாந்தின் Nakhon Pathom நகரில் நடைபெற்ற 2025 தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டியில், மலேசிய சேப்பாக் தக்ராவ் அணி பாரம்பரிய போட்டியாளரான தாய்லாந்தை 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்தப் பரபரப்பான வெற்றி, 1991 ஆம் ஆண்டு மணிலாவில் கடைசியாக வென்றதிலிருந்து, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் தாய்லாந்தின் ஆதிக்கத்தால் தடைபட்டு வந்த பதக்கத்தை மலேசியா மீண்டும் கைப்பற்ற உதவியது.
முதல் செட்டை இழந்த போதிலும், இரண்டாவது, மூன்றாவது செட்களில் மலேசிய வீரர்கள் அற்புதமான மீள் எழுச்சியைக் காட்டி, போட்டியை வென்றனர். "தாய்லாந்து மண்ணிலேயே அவர்களைத் தோற்கடித்தது இன்னும் இனிமையான வெற்றி" என்று மலேசிய சேப்பாக் தக்ராவ் சம்மேளனத்தின் தலைவர் முகமட் சுமாலி ரெடுவான் பூரிப்படைந்தார்.








