Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கொரியா பொது பூப்பந்து போட்டி
விளையாட்டு

கொரியா பொது பூப்பந்து போட்டி

Share:

சுவோன், செப்டம்பர்.25-

நாட்டின் இரு கலப்பு இரட்டையர் ஜோடிகள் கொரியா பொது பூப்பந்து போட்டியின் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. கோ சுன் ஹுவாட்-ஷெவோன் லாய் இணை, முன்னதாக சீன ஜோடியை எதிர்கொண்டது. மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய மலேசியாவின் சுன் ஹுவாட்-ஷெவோன் லாய் நேரடி செட்களில் வெற்றி பெற்றனர். அதன் வழி அவர்கள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். காலிறுதியில் அவர்கள் மீண்டும் சீன இணையுடன் களம் இறங்குகின்றனர்.

இதனிடையே நாட்டின் மற்றொரு ஜோடியான டியான் சீ-சியூ சியென், தென் கொரிய ஜோடியை மூன்று செட்களில் வெற்றி கொண்டனர். நாளை அடுத்த ஆட்டத்தில் அவர்கள் டென்மார்க் விளையாட்டாளர்களுடன் களம் காண்கின்றனர்.

Related News