கோல நெருஸ், டிசம்பர்.07-
மலேசிய சூப்பர் லீக் கால்பந்தாட்டத்தில் கூச்சிங் சிட்டியும் திரங்கானுவும் 1-1 என சமநிலை கண்டன. 3 முழு புள்ளிகளைப் பெறும் இலக்கில் இரு அணிகளும் சுல்தான் மிஸான் ஸைனால் அரங்கில் களமிறங்கின.
முற்பாதி ஆட்டத்தில் கூச்சிங் சிட்டி ஒரு கோலை அடித்து முன்னணி வகித்தது. பிற்பாதியில் அவ்வணி மீண்டும் கோல் போட முயற்சித்தது. ஆயினும் அது ஈடேறவில்லை. பின்னர் திரங்கானு ஒரு கோலைப் புகுத்தி ஆட்டத்தைச் சமப்படுத்தியது.








