Oct 19, 2025
Thisaigal NewsYouTube
பரிஸ் ஒலிம்பிக்கில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய அருண: இலங்கைக்கு புதிய அங்கீகாரம்
விளையாட்டு

பரிஸ் ஒலிம்பிக்கில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய அருண: இலங்கைக்கு புதிய அங்கீகாரம்

Share:

பரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷன அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதன்படி, ஒலிம்பிக் வரலாற்றில் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இலங்கையர் என்ற சாதனையை அருண பெற்றுள்ளார்.

06 தகுதிகான் சுற்றுப் போட்டிகளைக் கொண்ட இந்தப் தொடரில் 5ஆவது சுற்றில் அருண கலந்துகொண்டார்.

3ஆவது இடம்

இதன்படி போட்டி தூரத்தை அவர் 44.99 வினாடிகளில் கடந்து 3ஆவது இடத்தை பெற்றுக்கொண்டார்.

இது அருணாவின் தனிப்பட்ட சிறந்த நிகர சராசரி ஆகும்.

அதன்படி, 400மீற்றர் தொடரில் இலங்கை சார்பில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் இலங்கை தடகள வீரர் என்ற சாதனையை, அருண பெற்றுள்ளார்.

Related News