ஜகார்த்தா, ஜூலை.21
மத்திய ஜகார்த்தாவில் இன்று இரவு இந்தோனேசியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான 23 வயதுக்குக் கீழ்பட்டவர்களுக்கான AFF ஆசியான் சம்மேளன கால்பந்து போட்டியின் A குழுவுக்கான ஆட்டத்தின் போது கிட்டத்தட்ட 1,620 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
அவ்வாட்டம் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு (மலேசிய நேரப்படி இரவு 9 மணிக்கு) செனாயன் விளையாட்டு வளாகத்தில் உள்ள கெலோரா பங் கர்னோ (GBK) பிரதான மைதானத்தில் நடைபெறுகிறது.
மைதானப் பகுதியைச் சுற்றியுள்ள போக்குவரத்து வசதிகள் மற்றும் தேவைகள் உரிய நடவடிக்கைகளுடன் கவனிக்கப்படும் என காவல் துறை கூறியது.
இதற்கிடையில், மலேசிய அணி, கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்க ஆட்டத்தில் பிலிப்பைன்ஸ் அணியிடம் 0-2 என்ற கோல் எண்ணிக்கையில் தோல்வியடைந்தது. பின்னர், புருணை அணியை 7-1 என்ற கணக்கில் தோற்கடித்தது. A குழுவுக்கான கடைசி ஆட்டத்தில் மலேசியா, இந்தோனேசியாவை வீழ்த்தப் போராடும். அரையிறுதிக்கு முன்னேற அதற்கு வெற்றி தேவைப்படுகிறது.