விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
காலிறுதி போட்டிகளின் முடிவில் தமிழ்நாடு, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.
இந்நிலையில், இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு, அரியானா அணிகள் மோதின. டாஸ் வென்ற அரியானா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய அரியானா அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் அடித்துள்ளது.
அந்த அணியின் ஹிமான்ஷு ராணா சதமடித்து அசத்தினார்.