ஜப்பான், ஜூலை.18-
நாட்டின் கலப்பு இரட்டையர் பிரிவின் கோ சூன் ஹுவாட்- ஷெவோன் லாய் ஜப்பான் பொது பூப்பந்து போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அவ்விருவரும் மூன்றாம் சுற்றில் சிங்கப்பூர் இணையான டெர்ரி ஹீ-ஜின் யூ ஜியாவை சந்தித்தனர். அதில் மலேசிய ஜோடி 32 டே நிமிடங்களில் நேரடி செட்களில் வெற்றி பெற்றது.
இதனிடையே உலகின் நான்காம் நிலையில் இருக்கும் நாட்டின் மற்றொரு ஜோடியான சென் தாங் ஜீ-தோ யீ வெய்யும் அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் இந்தோனேசிய விளையாட்டாளர்களை மூன்று செட்களில் வீழ்த்தினர்.
மேலுமொரு கலப்பு இரட்டையரான ஹோ பாங் ரொன்-செங் சு யின், சீன இணையிடம் நேரடி செட்களில் தோல்வி கண்டனர்.