Oct 19, 2025
Thisaigal NewsYouTube
டி20 போட்டிகளில் அதிக வெற்றி: டோனி சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா
விளையாட்டு

டி20 போட்டிகளில் அதிக வெற்றி: டோனி சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா

Share:

சர்வதேச டி20 போட்டியில் அதிக வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டனாக எம்.எஸ்.டோனி உள்ளார். அவரது தலைமையில் இந்திய அணி 41 போட்டிகளில் (72 ஆட்டம்) வெற்றி பெற்றுள்ளது.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் டோனியின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.

நாளை நடைபெறும் 3வது போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் டோனியின் சாதனையை ரோகித் சர்மா முடியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 53 போட்டிகளில் விளையாடி 41-ல் வெற்றி பெற்றுள்ளது. 12 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

Related News