கடந்த 2 ஆண்டுகளாக பி.எஸ்.ஜி. எனப்படும் பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வந்த கால்பந்து உலகின் சிறந்த வீரரும் , அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான 35 வயது லியோனல் மெஸ்ஸி, அண்மையில் கிளப் நிர்வாகத்தின் அனுமதியின்றி சவுதிஅரேபியாவுக்கு சென்று வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி அவர் அந்த அணியை விட்டு விலகியுள்ளார் . மெஸ்ஸி கிளர்மோன்டுக்கு எதிரான ஆட்டமே பி.எஸ்.ஜி.-க்காக அவர் விளையாடிய கடைசி போட்டி என தெரிவிக்கப்பட்டது .
மெஸ்ஸி இந்த கிளப்புக்காக இதுவரை 75 ஆட்டங்களில் விளையாடி 32 கோல்களை அடித்துள்ளார். இந்த கிளப்புக்காக 2 பிரெஞ்சு சாம்பியன்ஷிப் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.