கோலாலம்பூர், டிசம்பர்.26-
மலேசிய கால்பந்து சங்கமான ஃஎப்எஎம், 8 மில்லியன் ரிங்கிட் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஏழு குடியுரிமை பெற்ற வீரர்களைப் பயன்படுத்தியதற்காக ஃபிஃபா தண்டனை விதித்தது. நிர்வாகக் குழுவிற்கு ஃபிஃபா 1.8 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்தது.
இதைத் தொடர்ந்து மலேசிய கால்பந்து சங்கம் 8 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது.
மேலும் தற்போது விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்துப் போராட அதிக சட்டச் செலவுகளையும் எதிர்கொள்கிறது.








