Dec 10, 2025
Thisaigal NewsYouTube
2026 உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் தனது இடத்தை உறுதிச் செய்துள்ளது பிரேசில்
விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் தனது இடத்தை உறுதிச் செய்துள்ளது பிரேசில்

Share:

சாவ் பாவ்லோ, ஜூன்.11-

பிரேசில் அணி 2026 உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் தனது இடத்தை உறுதிச் செய்துள்ளது. இன்று காலை நடைபெற்ற தகுதிச் சுற்று ஆட்டத்தில் அவ்வணி பராகுவேவை 1க்கு 0 என வீழ்த்தியது. அதன் வழி பிரேசில் அவ்வாய்ப்பைப் பெற்றது.

புதிய பயிற்றுனர் கார்லோ அன்செலோட்டியின் கீழ் பிரேசில் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவ்வணிக்கான ஒரே கோலை வினிசியஸ் ஜூனியர் ஆட்டத்தின் 44 ஆவது நிமிடத்தில் புகுத்தினார்.

அம்முடிவின் மூலம் பிரேசில் 25 புள்ளிகளுடன் தென் அமெரிக்க மண்டலத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை ஐந்து முறை உலகக் கிண்ணத்தை வாகை சூடியுள்ள பிரேசில், ஒவ்வோர் உலகக் கிண்ணத்திற்கும் தகுதி பெற்ற ஒரே அணி என்ற சாதனைத் தக்க வைத்து வருகிறது.

Related News