நியூ யார்க், செப்டம்பர்.03-
செர்பியாவின் நட்சத்திர வீரரான நோவாக் ஜோகோவிச், அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். காலிறுதியில் அவர் உபசரணை நாட்டு வீரரைத் தோற்கடித்தார். அதன் வழி டென்னிஸ் அரங்கில் தமது வேகத்தை மீண்டும் நிலை நிறுத்தினார் ஜோகோவிச்.
அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச், உலகின் இரண்டாம் நிலை விளையாட்டாளரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸைச் சந்திக்கவிருக்கிறார். அவ்வாட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.