Oct 19, 2025
Thisaigal NewsYouTube
மயங்க் யாதவ் பார்டர் கவாஸ்கர் தொடரில் இடம்பெற வேண்டும்
விளையாட்டு

மயங்க் யாதவ் பார்டர் கவாஸ்கர் தொடரில் இடம்பெற வேண்டும்

Share:

இந்தியா, ஏப்ரல் 04-

விளையாடிய இரண்டே போட்டிகளில் கிரிக்கெட் உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ். தொடர்ந்து இரண்டு போட்டிகளில் மூன்று விக்கெட்களை எடுத்து அடுத்தடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். மணிக்கு 156 கி.மீ வேகத்தில் வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறார்.

வேகத்தோடு கூடிய துல்லிய தாக்குதல் நிகழ்த்தும் மயங்க் யாதவ் இந்திய அணிக்காக ஆடுவதே எனது இலக்கு எனக் கூறியுள்ளார். 22 வயதாகும் டெல்லி வீரரான மயங்க் யாதவ் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். காயம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்ட அவர் தொடர்ந்து விளையாட முடியாமலும் வாய்ப்புகளைக் கவர முடியாமலும் கஷ்டப்பட்டு தற்போது மீண்டுள்ளார்.

இந்நிலையில ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மயங்க் அகர்வால் குறித்து பேசும்போது “இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்க பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் மயங்க் யாதவ் இடம்பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன். அவரை எதிர்கொள்ள ஆவலாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Related News