Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ஃபிஃபா கிளப் உலகக் கிண்ணம்: வெற்றியாளரானது செல்சி
விளையாட்டு

ஃபிஃபா கிளப் உலகக் கிண்ணம்: வெற்றியாளரானது செல்சி

Share:

லாஸ் ஏஞ்சலஸ், ஜூலை.14-

செல்சி கிளப் உலகக் கிண்ண வெற்றியாளராக மகுடம் சூடியது. இறுதியாட்டத்தில் அது ஐரோப்பிய வெற்றியாளரான பாரிஸ் செயிண்ட் ஜெர்மெயின், பிஎஸ்ஜி அணியை 3க்கு 0 என்ற கோல்களில் வீழ்த்தியது. தொடக்கத்திலிருந்தே விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்சி, 22 ஆவது நிமிடத்தில் முதல் கோலைப் பெற்றது. அக்கோலை பால்மர் அடித்தார்.

பால்மர் மீண்டும் 30 ஆவது நிமிடத்தில் செல்சிக்கான இரண்டாவது கோலைப் புகுத்தினார். அவ்வணியின் மூன்றாவது கோலை ஜொவா பெட்ரோ ஆட்டத்தின் 43 ஆவது நிமிடத்தில் போட்டார். பிஎஸ்ஜியின் முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்திய செல்சி, அதற்கு கோல் போட அறவே வாய்ப்பளிக்காமல் சிறப்பாக விளையாடியது.

வெற்றியாளரான செல்சிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிண்ணத்தை எடுத்து வழங்கினார்.

Related News