உலகக் கோப்பையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் விராட் கோலி சதம் அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுல்கரின் 49-வது சதத்தை சமன் செய்தார்.
அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று இலங்கை அணி வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.