Oct 18, 2025
Thisaigal NewsYouTube
டிசம்பரில் இந்தியா செல்கிறார் அர்ஜெண்டின நட்சத்திர வீரர் மெஸ்ஸி
விளையாட்டு

டிசம்பரில் இந்தியா செல்கிறார் அர்ஜெண்டின நட்சத்திர வீரர் மெஸ்ஸி

Share:

புதுடில்லி, ஆகஸ்ட்.15-

அர்ஜெண்டின கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி 3 நாட்கள் பயணமாக இந்தியா செல்லவிருக்கிறார். இப்பயணத்தின் போது அவர் பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார்.

அர்ஜென்டினா அணிக்கு உலகக் கிண்ணம் உள்ளிட்ட பல கோப்பைகளைப் பெற்றுத் தந்தவர் மெஸ்ஸி. இவருக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் உள்ளனர். அமெரிக்காவின் மியாமியில் உள்ள மேஜர் லீக் கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மெஸ்ஸி இந்தியா செல்லவிருப்பதாக தகவல் வெளியானது. அவரது வருகையை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில், அவரது இந்தியப் பயணம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. வரும் டிசம்பர் மாதம் 12ம் தேதி அவர் கோல்கட்டா செல்லவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, கால்பந்து விளையாட்டில் அவர் கொண்ட உறுதிப்பாட்டை பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் மெஸ்ஸி பங்கேற்க உள்ளார்.

கோல்கட்டாவில் நடக்கும் பாராட்டு விழாவிலும் மெஸ்ஸி கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்க உள்ளார். அங்கு தலா 7 பேர் கொண்ட அணி பங்கேற்கும் கால்பந்து தொடரும் நடக்க உள்ளது. குழந்தைகளுக்கான கால்பந்து தொடர்பான பயிற்சியிலும் கலந்து கொள்கிறார்.

இதன் பிறகு மும்பை, ஆமதாபாத்துக்கும் செல்கிறார். மும்பையின் வான்கடே மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியிலும் மெஸ்ஸி பங்கேற்க உள்ளார். அதன் பிறகு கடைசியாக 15ம் தேதி தலைநகர் டில்லிக்குச் செல்கிறார். அங்கு பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச உள்ளார். இதன் பிறகு அவர் சொந்த நாட்டுக்குக் கிளம்பி செல்கிறார்.

Related News