Oct 20, 2025
Thisaigal NewsYouTube
முதல் அணியாக டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்த நியூசிலாந்து
விளையாட்டு

முதல் அணியாக டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்த நியூசிலாந்து

Share:

இந்தியா, ஏப்ரல் 29-

டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணியானது அனுபவம் வாய்ந்த கேன் வில்லியம்சன் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில், தென் ஆப்பிரிக்கா முதல் முறையாக எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியனானது. 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சாம்பியனானது. 2010 இங்கிலாந்து, 2012 வெஸ்ட் இண்டீஸ், 2014 இலங்கை, 2016 வெஸ்ட் இண்டீஸ், 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஆகிய அணிகள் சாம்பியனாகியுள்ளன.

இதுவரையில் நியூசிலாந்து ஒரு முறை கூட சாம்பியன் டிராபியை கைப்பற்றவில்லை. ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து வரும் ஜூன் 1 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் 9 ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது.

இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், கனடா, ஓமன், நமீபியா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, நேபாள், பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, நியூசிலாந்து, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா என்று மொத்தமாக 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், டிரெண்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க்ச் சேப்மேன், டெவோன் கான்வே, லாக்கி ஃபெர்குசன், மேட் ஹென்ரி, டேரில் மிட்செல், ஜிம்மி நீசம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி

Related News