Oct 20, 2025
Thisaigal NewsYouTube
Paris 2024 Olympics:டிராப் பிரிவில் தமிழக வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் 68 புள்ளிகளுடன் 30ஆவது இடம்!
விளையாட்டு

Paris 2024 Olympics:டிராப் பிரிவில் தமிழக வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் 68 புள்ளிகளுடன் 30ஆவது இடம்!

Share:

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் 3ஆவது நாளில் இந்திய வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவில் 3 சுற்றுகள் முடிவில் 68 புள்ளிகள் பெற்று கடைசியாக 30ஆவது இடத்தில் உள்ளார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 3ஆவது நாளான இன்று இந்தியா துப்பாக்கி சுடுதலில் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் பங்கேற்றது. இதில், மகளிருக்கான போட்டியில் இந்திய வீராங்கனை ரமீதா ஜிண்டால் 7ஆவது இடம் பிடித்து வெளியேறினார். இதே போன்று ஆண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா வீரர் அர்ஜூன் பாபுதா 4ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை கோட்டைவிட்டார். இதையடுத்து ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவில் இந்தியா சார்பில் தமிழக வீரரான பிரித்விராஜ் தொண்டைமான் போட்டியிட்டார்.

இது அவரது முதல் ஒலிம்பிக் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. 37 வயதான தொண்டைமான், 3 சுற்றுகள் முடிவில் ஸ்வீடனின் லெவின் ஆண்டர்சன் பெற்ற புள்ளிகளை விட 6 புள்ளிகள் குறைவாக 68 புள்ளிகள் பெற்றுள்ளார். லெவின் ஆண்டர்சன் 74 புள்ளிகள் பெற்று நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் சிறந்த பதக்க வாய்ப்புகளில் ஒருவராக தொண்டைமான் கருதப்பட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்க்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் அணியில் இடம் பெற்றிருந்தார்.

இதிலிருந்து மீண்டு வர நாளையும் வாய்ப்புள்ளதால் எப்படியும் பிரித்விராஜ் தொண்டைமான் பதக்க சுற்றுக்கு தகுதி பெற்று இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News