சென்னை பல்கலைக்கழகம் சார்பில் 55-வது டாக்டர் ஏ.எல்.முதலியார் பொன்விழா நினைவு தடகள போட்டி சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல்
மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது.
இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் லயோலா கல்லூரி வீரர் சூர்ய பிரகாஷ் (16.51 மீட்டர்) புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.